ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
எகிப்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் லிபியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலவி நாட்டிலும் போராட்டமும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டுள்ளது. இங்கு பிங்குவா முதாரிகா பல ஆண்டுகளாக அதிபராக உள்ளார். தற்போது இங்கு பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைநகர் லிலாங்வியில் ஒரு கும்பல் கடைகளை சூறையாடியது.
கலவரத்தை அடக்க போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகினர். 44 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்கும்படி அதிபர் முதாரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் அதிபர் முதாரிகா கட்சி பிரமுகர்களின் கடைகள் மற்றும்
வர்த்தக நிறுவனங்களை கொள்ளையடித்தனர் மற்றும் வன்முறை சம்பவங்களில்
ஈடுபட்டனர். கலவரத்தை அடக்க போலிசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலவரத்தை அடக்க போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகினர். 44 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்கும்படி அதிபர் முதாரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment