பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒய்எம்சிஏ
பயிற்சிப்பள்ளியின் 100-வது ஆண்டு விழாவை குத்துவிளக்கேற்றித் தொடக்கி
வைக்கிறார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.
பெங்களூர் : சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் ஆயுக்த
அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக
ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார். பெங்களூரில் யுனைடெட் தியாலஜிகல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை கிடைத்ததும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன். அறிக்கையின் பரிந்துரைகளுக்குப் புறம்பாக எதையும் செய்யமாட்டேன். முதல்வர் எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டுமா என்று கேட்கிறீர்கள்.2 நாள்கள் கழித்து வாருங்கள். அப்போது எல்லாம் தெரியும்.
ஆனால், எதையும் எதிர்பார்க்காதீர்கள். முதல்வர் எடியூரப்பா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அறிக்கையை பார்க்கும் வரை அவரைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க முடியாது.
மாநில அரசு மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்த பிறகே என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.
சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை எனக்கு அனுப்ப்பட்டால் லோக் ஆயுக்த சட்டத்தின் பிரிவு 12,13-ன்படி தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றார் பரத்வாஜ்.
No comments:
Post a Comment