நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பாரிய
குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டோரின்
எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று வந்த தகவல் படி இதுவரைக்கும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு காரியங்கள் பல அமைந்துள்ள பகுதியில் ஒன்று, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுதாக்குதலாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நார்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் அலுவகலகம் கடுமையாக சேதமடைந்துள்ள போதும், அவர் அந்நேரம் தனது வீட்டில் இருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
எனினும் நார்வேயின் பிரபலமான வீ.ஜி பத்திரிகை அலுவலகம் (17 மாடி கட்டிடம்) தீப்பிடித்துள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து 5 மணி நேரத்துக்குள் , உட்டோயா எனும் இடத்தில் நடைபெற்றுகொண்டிருந்த தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டம் ஒன்றில் போலீஸ் சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சராமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இதிலும் பலர் கொல்லப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல குண்டுத்தாக்குதல் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் நார்வே பிரதமர் எங்கு உள்ளார் என்ற தகவலை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒரு தீவிரமாக அவதானிக்கப்பட வேண்டிய சம்பவம், நார்வே இதை எதிர்கொள்ள தயார்கொள்ளவேண்டும். இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என நோர்வேயின் TV2 தொலைக்காட்சிக்கு பிரதமர் இரகசிய பேட்டி ஒன்று அளித்துள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.
No comments:
Post a Comment