ஸ்ரீநகர் : ஜம்மு
கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி (தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து
வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு
செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான
நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்
உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக
இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
கஷ்மீரை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களின்
வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்திவருகிறது இந்திய ராணுவம். தெற்கு கஷ்மீரில்
கல்காம் மாவட்டத்தில் 32 வயதான ருகையா பானு என்ற முஸ்லிம் சகோதரியை
கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் இந்திய ராணுவத்தைச்
சார்ந்த இரு வெறியர்கள்.
ருகையாவை கடத்திச்சென்று ஆட்கள் நடமாட்டம்
இல்லாத பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து இரண்டு நாட்களாக கூட்டு
பாலியல் வன்புணர்வைச் செய்துள்ளனர் இந்த வெறியர்கள்.
ராணுவத்தின் இந்த அக்கிரமச் செயலை கண்டித்து
பொதுமக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கஷ்மீர் மாநில முதல்வர் உமர்
அப்துல்லாஹ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இப்பகுதியில் ராணுவத்தினரின்
எண்ணிக்கை 20க்கு கீழே என்பதால் அடையாளம் காண்பது எளிது என தெரிவித்த உமர்
அப்துல்லாஹ், சிறப்பு ஆயுத அதிகாரச் சட்டத்தின் காரணமாக கருணை காண்பிக்க
மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் இளம் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்துள்ளனர்.
1992-ஆம் ஆண்டு வடக்கு கஷ்மீரில்
குப்வாராவில் பாலியல் வன்புணர்வுச் செய்த குற்றவாளிகளான வெறிப்பிடித்த
இந்திய ராணுவத்தினர் சிறப்பு ஆயுத அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில்
தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் அம்மாதிரி நிகழுமா என உமர் அப்துல்லாஹ்வின்
ஆதரவாளர்கள் பகிர்ந்துக்கொண்டனர்.
2009-ஆம் ஆண்டு ஷோபியானில் இரண்டு முஸ்லிம்
சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொல்லப்பட்டதாக கூறப்படும்
சம்பவத்தை தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து
சி.பி.ஐ விசாரணை நடத்தியது. ஆனால், இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு
ஆளாகவில்லை எனவும், குளத்தில் மூழ்கி இறந்ததாகவும் சி.பி.ஐ கண்டறிந்ததாம்.
ருகையா பானுவின் சம்பவத்தைத் தொடர்ந்து
கஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்ட சூழல் உருவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடைகள்,
நிறுவனங்கள் மூடப்பட்டன. பி.டி.பி தலைவர் மஹ்பூபா முஃப்தி சம்பவ இடத்திற்கு
வருகைத்தந்து அமைதியான போராட்டத்திற்கு மக்களிடம் அழைப்புவிடுத்தார்.
No comments:
Post a Comment