புற்று
நோய்க் கட்டிகளுக்கான பிரதான சிகிச்சை 'கீமோதெரபி' என்பதாகும். ஆனால் இந்த
சிகிச்சையினால் புற்றுநோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி அடிக்கடி ஏற்படும்.
இப்போது இதனைத் தடுக்க இஞ்சி அல்லது இஞ்சித் தூள் உதவுவதாக டெல்லியில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"பரிசோதனைச் செய்து பார்த்ததில் கீமோதெரபியினால் ஏற்படும் வாந்தி, குமட்டலுக்கு எதிராக இஞ்சி நன்றாக வேலை செய்வது தெரியவந்தது, இதனால் இஞ்சித் தூளை கேப்சூல் வடிவத்தில் பயன்படுத்தும் முறையை நாம் பரிசீலிக்கலாம், ஏனெனில் புற்று நோயாளிகளின் தினசரி அவஸ்தையாக இந்த வாந்தியும், குமட்டலும் இருந்து வருகிறது" என்று புற்றுநோய் நிபுணரான பேராசிரியர் சமீர் பக்ஷி தெரிவித்துள்ளார்.
இதற்காக 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நேரடி பரிசோதனையில் 20 கிலோ உடல் எடை முதல் 40 கிலோ உடல் எடை வரையிலான நோயாளிகளுக்கு 167மிலி கிராம் இஞ்சித்தூள் கொடுக்கப்பட்டது.
40கிலோ முதல் 60 கிலோ உடல் எடை வரை உள்ளவர்களுக்கு 400மிலி கிராம் வரை இஞ்சித் தூள் கேப்சூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
கீமோதெரபிக்குப் பிறகு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை இஞ்சி கட்டுப்படுத்தினாலும் அதனை முழுமையாக நிறுத்தவில்லை என்றும் இந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment