Monday 25 July 2011

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை : மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினுக்குப் பதில், புதிய கமிஷனராக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் பி.ஏவான எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்திரவில் கூறியுள்ளதாவது,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக ஆஷிஸ் குமாரும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக எஸ். மதுமதியும், திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக டாக்டர் ஆர். செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வளர்ச்சி, அறநிலையத்துறை, செய்தித் துறை துணைச் செயலாளராக எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநராக சத்ய பிரியா ஷாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக கே. விஜயகுமார் பதவியேற்பார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக சி.வி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக ஏ. முகமது அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால் நடை மருத்துவத்துறை இயக்குநனராக டாக்டர் ஆர். பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிறுவனத்தின் இயக்குநராக பி. அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1991ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்பெஷல் பி.ஏவாகவும், 1992ல் முதல்வரின் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதே போல திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக அஜய்யாதவும், திருச்சி மாநகராட்சி ஆணையராக வீரராகவராவும், சேலம் மாநகராட்சி ஆணையராக ஜி. லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment