Tuesday, 28 June 2011

பாகிஸ்தானில் பரபரப்பு: கூட்டணி கட்சி அமைச்சர்கள் ராஜிநாமா

இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ்தானின் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த முத்தஹிதா குவாமி இயக்கத்தைச் (எம்க்யூஎம்) சேர்ந்த 3 அமைச்சர்களும் திடீரென ராஜிநாமா செய்துள்ளனர்.


அவர்கள் மூவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அதிபர் ஜர்தாரிக்கு இன்று அனுப்பியுள்ளனர்.

இத்தகவலை பாக். ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து வெளியேற முத்தஹிதா குவாமி இயக்கம் நேற்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் பரூக் சத்தார், பாபர் கெளரி, டாக்டர் நதீம் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

கராச்சியில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்கும் முடிவை எதிர்த்து முத்தஹிதா குவாமி இயக்கம் கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment