Tuesday 28 June 2011

ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி: ரங்கசாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி ஜூலை 1 ம் தேதி முதல் அமல் செய்யப்படும்.

தேர்தலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு 25 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு 15 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதுவும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதியோர் ஓய்வூதியம் ரூ.750 லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளோம். மாணவர்களுக்கான அரசின் நிதியுதவி நிலுவையில் இருந்தது. அதற்காக ரூ.7.9 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை வழக்கம் போல ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும்.

லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு இப்போது பணம் பட்டுவாடா நடந்து வருகிறது. இந்த ஆலையில் உள்ள சர்க்கரையை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். புதுச்சேரியில் பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகள் வழங்க உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment