Tuesday 28 June 2011

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்

டெல்லி:  இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இவர் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக உள்ளார்.


வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளார்.
இதையடுத்து வெளியுறவுத்துறை செயலாளராக ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதராக பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இவர் வெளியுறவுச் செயலாளர் பொறுப்பை ஏற்பார்.

1974ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சைச் சேர்ந்த மத்தாய், 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன் வியன்னா, கொழும்பு, வாஷிங்டன், தெஹ்ரான், பிரஸ்ஸல்ஸ் ஆகிய இந்திய தூதரகங்களில் அதிகாரியாக இருந்துள்ளார் மத்தாய்.

வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், இஸ்ரேல், கத்தார் நாடுகளின் தூதராகவும் இருந்துள்ளார். இங்கிலாந்துக்கான துணைத் தூதராகவும் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment