Tuesday, 28 June 2011

வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து

கெய்ரோ:எகிப்தில் அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டுள்ளதாக எகிப்தின் துணைப்பிரதமர் யஹ்யா அல் ஜமால் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக இவ்விரு நாடுகளும் வகுப்புவாதத்தை வளர்த்துவதாக அவர் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் முக்கிய நாடு என்பதால் எகிப்திற்கு எதிராக இஸ்ரேல் தந்திரங்களை கையாளுகிறது.மக்கள் புரட்சியின் மூலம் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றிய எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களும், ஸலஃபி முஸ்லிம்களும் தலைநகரான கெய்ரோவில் மோதிக்கொண்டனர். மார்ச் மாதம் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாதுகாப்பை வலுப்படுத்திய எகிப்து கடந்த மாதம் பத்திரிகையாளர் வேடத்தில் பணியாற்றிய மொசாத் ஏஜண்டை கைதுச்செய்தது. வகுப்புவாத மோதல் சம்பவத்தில் இஸ்ரேலின் பங்கு குறித்த சந்தேகம் வலுத்தது. முபாரக்கிற்கு எதிராக நடந்த புரட்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஐக்கியத்துடன் களத்தில் இருந்தனர். முபாரக்கின் ஆட்சியில் இஸ்ரேலுடனான நல்ல உறவு புரட்சிக்கு பிறகு மந்தமடைந்தது இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment