Tuesday 28 June 2011

எம்.பி.பி.எஸ்: தேனி, திருவாரூர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- பெற்றோர் மகிழ்ச்சி

சென்னை:  தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




கடந்த 2006-ம் ஆண்டு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் நேற்று (27-ம் தேதி) அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் இங்கு எம்.பி.பி.எஸ். படிக்க மாணவர்களை சேர்ப்பதில் எந்த வில்லங்கமும் இருக்காது.

2010-11-ம் கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்டது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி. அங்கு நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 2014-15-ம் கல்வியாண்டு வரை தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்பு தான் அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த இரண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற செய்தியால் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 12 ஆயிரத்து 290 மட்டுமே அதனால் தான் இந்த நிம்மதிப் பெருமூச்சு.

No comments:

Post a Comment