Friday 22 July 2011

அதிபருக்கு எதிராக சினிகலில் மக்கள் கிளர்ச்சி

டாக்கர் : சினிகல் நாட்டின் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான சினிகல் நாட்டின் அதிபராக சினிகல் ஜனநாயக கட்சியின் தலைவரான அபுதுல்யாவாடே (85) உள்ளார். இவர் ஏற்கனவே (2000-2006) , (2006-வரை) இரண்டு முறை அதிபராக இருந்துள்ளார். தற்போது இவரது பதவிகாலம் அடுத்த ஆண்டு ( 2012) பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.

இதையொட்டி மூன்றாவது முறையாக அதிபராக போட்டியிட விரும்பினார். இதற்காக தேர்தல் விதிமுறைகள் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டங்களை திருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பெததுமக்கள், எதிர்கட்சியினர் இவர் மூன்றாவது முறையாக அதிபராக வர எதிர்ப்பு எதிர்த்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இது நாளடையில் தீவிரமடைந்துள்ளது.

தலைநகர் டாக்கரில் 50 ஆயிரம் பேர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிபர் அபுதுல்யாவாடே , நேற்று திடீர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

சினிகல் நாட்டின் உள் விவகாரங்களில் அரேபிய நாடுகளிசுன் தலையீடு உள்ளது. இது துனீசியா, எகிப்து போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பு கருதி எதிர்க்கட்சிகள், பேரணி நடத்தவோ, கூட்டம் நடத்தவோ கூடாது எனவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment