Friday 22 July 2011

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கல்லூரிகளுக்கு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

சென்னை : தனது கட்டுப்பாட்டில் வரும் 167 பொறியியல் கல்லூரிகளின், 'ரேங்க்' பட்டியலை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டது.

கடந்த ஜனவரியில் வெளியான தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் ஒரு பட்டியலையும், பாட வாரியான தேர்வு முடிவு அடிப்படையில் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

மாநில அளவிலான, 'ரேங்க்' பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறும்போது,"அந்தந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களிடம் தான், மாணவர்கள் தேர்ச்சி விவரம் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.

எனவே, அந்தந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் கல்லூரிகளின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட வேண்டும்' என்றனர்.

சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளின், 'ரேங்க்' பட்டியலை, www.annatech.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை வெளியிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில், தனியார் கல்லூரிகளின், "ரேங்க்' பட்டியலை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment