ராஜ்ய சபா உறுப்பினர் அமர்சிங், டெல்லி குற்றப்புலனாய்வு காவற்துறையினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்காக இன்று காலை, சாணக்யா புரியில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனது மெர்சிடஸ் காரில் வருகை தந்தார். அவரை ஊடகங்கள் பேட்டி காண முனைந்த போதும், அச்சந்தர்ப்பத்தை தவிர்த்துவிட்டு விரைவாக கட்டிடத்திற்குள் சென்றுவிட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு பாராளுமன்றில், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பிகளுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், சமாஜ்வாடி ஜனதா கட்சியின் பொதுச்செயலர் அமர்சிங் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மந்தமாக விசாரணை நடைபெற்று வருவதாக சுப்ரீம் நீதிமன்றம் கண்டனம் விடுத்ததை அடுத்து, அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா அண்மையில் திடீர் கைது செய்யப்பட்டார்.
அமர்சிங், ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது விசாரணை நடத்த சிறப்பு அனுமதி கோரியது காவற்துறை. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை அவர் விசாரணைக்ககு அழைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment