Thursday 14 July 2011

எகிப்து கலவரம் : 700 போலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்

எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.



எகிப்தில் அதிபர் முபாரக்கின் ஆட்சி அகற்றப்பட்டப் பின்னர் நேற்று, புதிய அரசியலமைப்பு வரையறுக்கப்பட்டது. இதற்கு வழிகாட்டியாக 100 பேர் கொண்ட அரசியல் நிர்ணய சபை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

எகிப்தி்ல் வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தகிரிர் சதுக்கத்தில் நடந்த வன்முறையில் தான் அதிகம் பேர் ‌கொல்லப்பட்டனர். அப்போது பணியாற்றிய உயர் போலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் என 700 பேர் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய பிரதமர் ஈசாம் ஷெராப் தெரிவித்தார்.

அதன்படி 505 மேஜர் ஜெனரல்கள், உள்துறை அமைச்சகத்தின் 10 போலிசார்கள், 82 கர்னல்கள் மற்றும் 82 உதவி கர்னல்கள் என ஏறத்தாழ 700 போலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 164 பேர் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளனர்.

No comments:

Post a Comment