Thursday, 9 June 2011

புது வித யுக்திகளை கையாளும் திருடர்கள்

திருட்டு என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தொழில் என்றாலும் சில திருடர்களின் திருட்டு முயற்சிகளைப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் சில சமயங்களில் நகைப்பும் ஏற்படுகின்றன.


ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த 2 திருடர்களின் கூட்டணி அடித்த கொள்ளை இந்த ரகத்தைச் சேர்ந்தது.


விமான நிலையத்துக்கு வந்து சேரும் பயணிகளின் லக்கேஜ் பைகளில் திருட்டுப் போவது குறித்து அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அந்த விமானநிலையத்துக்கு வந்த லக்கேஜ் வேனில் திடீரென ஏறி சோதனையிட்டனர்.


அப்போது மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றைப் பார்த்த போது அதன் ஜிப் பூட்டப்படாமல் எளிதில் திறக்கும் விதத்தில் இருந்ததால் சந்தேகப்பட்டனர். உடனே அதன் ஜிப்பைக் கழற்றியதும் உள்ளே ஒருவர் கை, கால்களை முடக்கி தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையைப் போலப் படுத்திருந்தார்.


அவரைத் தட்டி எழுப்பி விசாரித்ததில் உண்மையைக் கக்கிவிட்டார். விமான நிலையத்துக்கு வரும் அந்த லக்கேஜ் வண்டியில் அவரை சூட்கேஸில் அடைத்து அவருடைய நண்பர் ஏற்றி விட்டு விமான நிலையத்துக்கு வேறு வண்டியில் போய்விடுவாராம். அந்த லக்கேஜ் வேனை விமான நிலையத்தில் மீண்டும் திறக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமாம்.


அந்த இடைவெளியில் அவர் சூட்கேûஸத் திறந்து கொண்டு வெளியே வந்து மற்ற சூட்கேஸ்களில் தேடுதல் வேட்டை போடுவாராம். விலையுயர்ந்த நகைகள், தங்கம், வைரம், நவரத்தினங்கள், கடிகாரங்கள், செல்போன்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது சூட்கேஸில் வந்து உட்கார்ந்து கொண்டு மூடிவிடுவாராம்.


பிறகு அவரை ஏற்றி விட்ட நண்பர் நிலையத்துக்கு வந்து சூட்கேஸை எடுத்துச் சென்று விடுவாராம். சூட்கேஸில் இருந்தவரையும் அவருடைய நண்பரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment