மஞ்சேஷ்வரம்(கேரளா):பா.ஜ.கவை சார்ந்த பஞ்சாயத்து துணை தலைவரை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ) ஆதரவுடன் காங்.-முஸ்லீக் கூட்டணி தோற்கடித்தது.
கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டத்தில் மஞ்சேஷ்வரம் கிராம பஞ்சாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த துணை தலைவர் தேர்தலில் பா.ஜ.கவை சார்ந்த ஹரிச்சந்திரனுக்கு மு.லீக் உறுப்பினர் ஒருவர் கட்சி மாறி வாக்களித்தார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிச்சந்திரன் பஞ்.துணை தலைவரானார்.
இதனை தொடர்ந்து கட்சி மாறி வாக்களித்த மு.லீக் உறுப்பினரிடம் பதவியை ராஜினாமா செய்ய மு.லீக் கட்சி வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த வார்டில் நடந்த மறு தேர்தலில் மு.லீக் வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங். கட்சி பா.ஜ.க பஞ்.துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது. இதில் எஸ்.டி.பி.ஐயின் ஒரே உறுப்பினரான மைமூனா அபூபக்கர் காங்.-மு.லீக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனை தொடர்ந்து ஹரிச்சந்திரன் பதவி விலகினார்.
பஞ்சாயத்து கவுன்சிலில் மொத்த உறுப்பினர்கள் 21 ஆவர்.எஸ்.டி.பி.ஐ-1,மு.லீக்-9, காங்.-1, சி.பி.எம்-1, சி.பி.ஐ-1 , பா.ஜ.க-8.
No comments:
Post a Comment