Thursday, 9 June 2011

குஜராத் இனப்படுகொலை:போலீஸ் அதிகாரிகளுக்கு பங்குண்டு-முன்னாள் டி.ஜி.பி


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் மூத்த போலீஸ் அதிகார்களுக்கு பங்குண்டு என முன்னாள் டி.ஜி.பி ஆர்.என்.பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அசோசியேசன் கலவரம் நடக்கும்போது கூட்டம் நடத்தி போலீசார் அவர்களின் அரசியல்சட்ட ரீதியான கடமையை நிறைவேற்றவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதே இதற்கு ஆதாரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலவரம் துவங்கி இரண்டு மாதத்திற்கு பிறகே அசோசியேசன் கூட்டம் நடந்தது. கலவரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பங்குள்ளது என்பது தெளிவான சூழலில் இத்தகையதொரு அழைப்பு விடுக்கப்பட்டது என பட்டாச்சார்யா கூறுகிறார். 

அவ்வேளையில் பட்டாச்சார்யா குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அசோசியேசன் தலைவராக பதவி வகித்தார். உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பட் நேர்மையான போலீஸ் அதிகாரி என பணியிலிருந்து ஓய்வு பெற்ற பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment