சென்னை: செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல்
இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும்
பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
ஆசிரியர்களும்
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால்,
மாணவ, மாணவிகள் பலர் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் பேசுவது, மெசேஜ் அனுப்புவதுமாய் இருக்கின்றனர். செல்போன்
இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகி விட்டனர்.
செல்போனில் பேசுவது, மெசேஜ் செய்வது, கேம்ஸ் ஆடுவது, பாடல் கேட்பது மட்டு மின்றி ஆபாச படங்களை டவுண்லோடு செய்து பார்க்கின்றனர். இந்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் வகுப்புகளுக்கு செல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர்.
தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு இருப்பதால் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி, கல்லூரியில் சரியான கட்டுப்பாடு இல்லாததால் மாணவ, மாணவிகள் வகுப்பறையிலேயே செல்போன் பயன்படுத்து கின்றனர். இதை ஆசிரியர்களும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தினால், படிப்பில் கவனம் செல்லாது. எந்த நேரமும் செல்போனிலே கவனம் இருக்கும். இதனால், அவர்களின் கல்வி பாதிக்கும். சுயமாக சிந்திக்கும் திறன் தடைப்படும். அறிவு திறன் பாதிக்கப்படும். சாதிக்கும் எண்ணம் வராது.
செல்போன்களில் தொடர்ந்து பேசும் போதும், பாடல் கேட்கும் போதும், அதில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் செவி திறன் செயலிழந்து, கேட்கும் திறன் பாதிக்கப்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எப்போது பார்த்தாலும் மாணவ, மாணவிகள் செல்போனில் மெசேஜ் செய்து கொண்டே இருக்கின்றனர்.
இளம் வயதில் கைவிரல்கள் மென்மையாகவும் எளிதில் மடக்க கூடியதாக இருக்கும். தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டே இருந்தால் விரைவில் கை விரல்கள் செயலிழந்து விடும். செல்போன்களில் ஆபாசப்படங்களை பார்க்கும் போது, முற்றிலும் மனநிலை பாதிப்படையும். எண்ணம் செக்ஸ் என்ற விஷயத்தை நோக்கியே இருக்கும். இதனால், விரும்பத்தகாத தீய செயல் களில் ஈடுபடவும் தொடங்குவார்கள்.

No comments:
Post a Comment