Monday, 11 July 2011

தனி நாடாக உருவெடுக்க ஐக்கிய நாடுகள் சபையை நாடுகிறது பாலஸ்தீனம்

ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.

பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் வாக்கெடுப்பில் தனி நாடு அந்தஸ்தில் வெற்றி பெற பாலஸ்தீன தலைவர்கள் ஐ.நா உறுப்பினர் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தனி பாலஸ்தீன நாடு அங்கீகாரம் பெறுவதற்கு கனடாவின் ஆதரவை பெற கடுமையாக வலியுறுத்துவோம் என ஒட்டாவில் உள்ள பாலஸ்தீன தூதர் தெரிவித்தார்.

கனடா அங்கீகார நடவடிக்கையில் பொதுவான நிலை கடைபிடிக்க கேட்டுக்கொள்வோம் என பாலஸ்தீனக்குழுவின் தலைவர் லிண்டா சோபே அலி கூறினார். கடந்த 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய இஸ்ரேலின் எல்லை நிலையை கனடா அங்கீகரிக்க வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜான்பெய்ர்ட் கூறுகையில்,"தமது அரசின் நீண்ட கால நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை" என்றார். ஐக்கிய நாடுகள் சபையில் 192 உறுப்பினர் நாடுகள் உள்ளன.

இந்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பாலஸ்தீனம் பெற்றால் தனி நாடு அந்தஸ்து பெறும். அதன் படி 128 உறுப்பினர் நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

No comments:

Post a Comment