ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது. அந்த படகில் 100க்கும்
மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் உலக புகழ்பெற்ற வோல்கா ஏரியில் இரட்டை அடுக்கு
கொண்ட சுற்றுலா படகு நேற்று கவிழ்ந்தது. அந்த படகில் மொத்தம் 180 பயணிகள்
இருந்தனர். கடுமையான புயல் காற்று வீசியதில் அந்த படகு தண்ணீரில் தடுமாறி
கவிழ்ந்தது.
படகு கவிழும் போது இரண்டு பயணிகள் மட்டுமே நேற்று உயிர் தப்பினர். இதர
நபர்களை காணவில்லை. 20 அடி ஆழத்தில் படகு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த
விபத்தை தொடர்ந்து பழைய படகுகள் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக 2 நிமிடத்தில் படகு தண்ணீரில் மூழ்கியது. இந்த
எதிர்பாராத விபத்தில் சிக்கிய பயணிகள் எதையாவது பற்றிக்கொண்டு உயிர்
பிழைக்க போராடினர். படகில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள்.
அவர்களது நிலை என்ன என்பது தெரியவில்லை. விபத்தில் சிக்கிய படகின் பெயர்
பல்காரியா என்பதாகும். மழை மற்றும் பயங்கர காற்று வீசிய போது படகு
விபத்தில் சிக்கியதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறினர்.
விபத்து இடத்திற்கு அவசர நிலை குழுவினர் விரைந்தனர். அந்த குழுவின் ஒரு
செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"தண்ணீரில் மூழ்கியவர்கள் உயிருடன் இருப்பது
சந்தேகமாக உள்ளது" என்றார்.
படகில் உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள காசன் பகுதிக்கு கொண்டு
செல்லப்பட்டனர். இதுவரை 5 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்திகள்
வந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கும் என
அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment