Monday, 11 July 2011

சவுதி அரேபியாவுக்கு 200 பீரங்கிகள் சப்ளை: ஜெர்மனி அரசு உறுதி

மத்திய கிழக்கு பகுதியில் ஜனநாயக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டம் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியோ பார்டு பீரங்கிகளை ஜெர்மனி அரசு அனுமதித்து உள்ளது.

 மத்திய கிழக்கு பகுதியில்  ஜெர்மனி வன்முறையை தூண்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த பீரங்கிகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க கூடாது என்றும் அவை வலியுறுத்தின.

இதுகுறித்து ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் பிரடெரிக் கூறுகையில்,"தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. இந்த வரிசையில் ஜெர்மனியும் முக்கிய கூட்டாளியாகவும் உள்ளது. எனவே இந்த பீரங்கி ஒப்பந்தம் சரியானது தான்" என்று கூறினார்.

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் வோல்கர் ருகே கூறுகையில்,"இந்த பீரங்கி ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரலாற்றின் தவறான பக்கத்தை மீண்டும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்தார்.

சவுதி அரேபியாவுக்கு பீரங்கிகள் விற்பனை செய்வதை ஜெர்மனியின் முக்கிய எதிர்கட்சியான சோசியல் டெமாக்ரேட்ஸ் கட்சியினர் துவக்கம் முதல் கடுமையாக எதிர்த்து வருகிறது.

No comments:

Post a Comment