இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தபப்ட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகி்ஸ்தான், இதனால் நாங்கள் கவலைப்படப்
போவதில்லை என்று கூறியுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில்,
பாகிஸ்தானையும் தன்னுடன் இணைத்து செயல்படுகிறது அமெரிக்கா. ஆனால் இதில்
பாகிஸ்தானின் ஒத்துழைப்பு சரிவர இல்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
இருந்தாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்து அதனுடன் இணைந்து செயல்பட வேண்டிய
நிலையில் அது உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மண்ணிலிருந்து
செயல்படும் அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு
பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டது. இதனால் கோபமடைந்த
அமெரிக்கா தற்போது அமெரிக்காவுக்கான ராணுவ உதவியை நிறுத்தி வைத்து
உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவியை
அமெரிக்கா அளிப்பதாக இருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவ் லபான் கூறுகையில், கடந்த எட்டு
மாதங்களில் நடந்த பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் இரு தரப்பு உறவுகளைப்
பாதித்துள்லன. இதன் விளைவாக அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் எண்ணிக்கையை
குறைக்குமாறு கூறியுள்ளது பாகிஸ்தான்.
இது தற்காலிகமான
நடவடிக்கைதான் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டாலும், பாகிஸ்தான்
ராணுவத்திற்குத்தேவையான உதவிகளையும், ஆதரவையும், பயிற்சியையும் தர முடியாத
நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து கருத்து
தெரிவித்துள்ள பாகிஸ்தானின் பொது உறவுத் துறை இயக்குநர் கூறுகையில்,
பாகிஸ்தானுக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் தேவையில்லை. வடக்கு
வசிரிஸ்தானிலும், ஸ்வாட் பகுதியிலும் நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக
நடத்திய தாக்குதல்களில் எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் இடம் பெறவில்லை
என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment