Monday 11 July 2011

முஸ்லிம் பெண்கள் நிகாபை கழற்றாவிட்டால் ஓர் ஆண்டு சிறை-ஆஸ்திரேலியாவில் சட்டம்

சிட்னி:முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும் அடிப்படையில் நிகாப் என்ற முகத்தை மறைக்கும் ஆடையை அணிவதை தடை செய்ய ஆஸ்திரேலியா சட்டம் கொண்டுவருகிறது.


இச்சட்டத்தின்படி போலீஸார் கோரினால் நிகாபை கழற்ற வேண்டும். இல்லையெனில் ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். நியூ சவுத் வேல்ஸ் அரசு இச்சட்டத்தை கொண்டுவருகிறது. 

போலீஸ் கோரிய பிறகும் நிகாபை கழற்றாவிட்டால் 5500 டாலர் அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த மாதம் ஸ்டேட் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் இச்சட்டத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் களமிறங்கியுள்ளன.

நிகாபை அணிந்து வாகனத்தை ஓட்டும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வதை அங்கீகரிக்க இயலாது என அவர்கள் கூறுகின்றனர். முகத்தை மூடி எவரும் வாகனத்தை ஓட்ட அனுமதிக்க இயலாது எனவும், அடையாளம் காண இது தடையாகும் எனவும் அரசு கூறுகிறது.

No comments:

Post a Comment