யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (18.06.2013) முத்துப்பேட்டையில் நான்கு இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.
தடா, பொடா சட்டங்களுக்கு இணையான சட்டமான UAPA (UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மனித உரிமைக்கும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் எதிரானதாகும்,எனவே இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஜுன் 9 முதல் 18 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில்தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டையில், தெற்குத்தெரு, ஆ.நெ. பள்ளி, பழைய பேருந்து நிலையம், மற்றும் ஆசாத் நகர் ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மத் தலைமை வகித்தார். பாப்புலர் ஃபிரண்டின் திருவாரூர் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் உரை நிகழ்த்தினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் மற்றும் புகைப்படம் : அஹமது கபீர்
No comments:
Post a Comment