Saturday, 22 June 2013

பாப்புலர் ஃபிரண்ட் மீது அவதூறு செய்தி வெளியிட்ட 10 நாளிதழ்களுக்கு பிரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

புது டெல்லி : பாப்புலர் ஃ பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்து நாளிதழ்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொருட்டு வரும் ஜுலை 16 ந்தேதி அன்று விசாரணை குழு முன் ஆஜராகும் படி பிரஸ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பத்திரிகைகளை கட்டுபடுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் தங்கள் அமைப்பின் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக பத்து நாளிதழ்கள் மீது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா புகார் கொடுத்தது.

அப்புகாரை ஏற்று தைனிக் ஜாஹ்ரன் இந்தி நாளிதழ் (மீரட் மற்றும் டெல்லி பதிப்புகள்) ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் (லக்னோ பதிப்பு) ஏசியன் ஏஜ் ஆங்கில நாளிதழ் (டெல்லி), டெக்கான் க்ரோனிகல் ஆங்கில நாளிதழ் (எர்ணாகுளம்), நவ் பாரத் டைம்ஸ் ஹிந்தி நாளிதழ் (டெல்லி) இன்குலாப் உருது நாளிதழ் (டெல்லி), நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் (காலிகட்), சண்டே கார்டியன் ஆங்கில வார இதழ் (டெல்லி) பயோனியர் (டெல்லி) ஆகியவற்றின் பிரதிநிதிகளை ஜுலை 16 அன்று ஆஜராகும் படி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment