Friday 21 June 2013

தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்! இந்திய அரசே வலியுறுத்து! முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம்!

கும்பகோணம், முத்துப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்களின் தூக்கு தண்டனையை குவைத் அரசு நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர் ந்தவர் சுரேஷ்(30). குவைத் நாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார். 2008ல் குவைத்தில் இலங் கையை சேர்ந்த பாத்திமா என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சுரேஷ், அவருடன் பணிபுரிந்த கும்பகோணத்தை சேர்ந்த காளிதாஸ், இலங் கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த குவைத் நீதிமன்றம் சுரேஷ், காளிதாஸ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், நித்யாவுக்கு ஆயுள்சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது. 

சுரேசையும், காளிதாசையும் கடந்த 17ம் தேதி தூக்கில் போட குவைத் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அவர்களது தூக்கு தண்ட னையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷின் தாய் மல்லிகா விடுத்த உருக்கமான கோரிக்கையை தொடர்ந்து, நாகை எம்பி விஜயன் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதன்பேரில் 2 பேரின் தூக்கு தண்டனையையும் குவைத் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ய  குவைத் அரசை வலியுறுத்துவது தொடர்பாக முத்துப்பேட்டையில் நேற்று இரவு அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில்சுரேஷ் மற்றும் காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கபட்டுள்ளது.  

எனவே நாளை காலை சரியாக கடையடைப்பு 9 மணிமுதல் 12 மணிவரையும், 10 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டமும் நடைபெற உள்ளது

No comments:

Post a Comment