திண்டுக்கல்: ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர்களுள் மைசூர் புலி ஹைதர் அலீயும் அவர் மகன் திப்பு சுல்தானும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இரு மன்னர்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப் போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான இடங்களை அடையாளங் காணும் பணி தொடங்கி சுமார் 10 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு விசுவ ஹிந்து பரிஷத் என்கிற பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நகரில் அரசுக்கு எதிரான கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
அரசுக்கு எதிரான இந்த கண்டன சுவரொட்டிகளை ஒட்டியதாக, திண்டுக்கல் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டபயங்கரவாதி அமைப்பாளர் சஞ்சீவிராஜ் என்னும் 25 வயது ஆசாமியை காவல்துறை கைது செய்துள்ளது.
கைதான சஞ்சீவிராஜ் மீது திண்டுக்கல் நகர தெற்கு மற்றும் வடக்கு காவல் நிலையங்களிலும், தாடிக் கொம்பு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதியப் பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment