அவன்-இவன் படத்தில் முஸ்லிம் மக்களை புண்படுத்திய இயக்குனர் பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் புகார் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலர் அக்ரம்கான், ஆணையரிடம் இன்று கொடுத்த புகார் மனுவில், சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது. எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment