Saturday, 2 July 2011

கனடா செய்தி கனடா நாளில் நாட்டு மக்கள் நிகழ்த்திய மனித தேசிய கொடி சாதனை

ஆயிரக்கணக்கான வின்னிபெக் மாகாண பகுதி மக்கள் சட்டமன்ற மைதானத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற டி-சர்ட்டுகளில் நேற்று குவிந்தனர். அவர்கள் கனடா நாள் கொண்டாட்டத்தில் மிகப் பெரும் தேசிய கொடியை உருவாக்கினார்கள்.



மனிதர்களே சிவப்பு, வெள்ளை நிற தேசியக் கொடியாக வடிவம் அமைத்த நிகழ்வு பார்ப்பவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. நேற்று நடந்த இந்த கொண்டாட்டம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா ஏற்படுத்திய வாழும் தேசியக் கொடி சாதனை அளவை மிஞ்சியது.
தேசியக் கொடியை 3400 மக்கள் ஒன்றாக கூடி நின்று உருவாக்கினார்கள் என வின்னிபெக் வர்த்தக மேம்பாட்டு மண்டல செயல் இயக்குனர் ஸ்டெபானோ கிராண்டே தெரிவித்தார்.

வின்னிபெக் மக்கள் மனித தேசியக் கொடியை உருவாக்கியதும் விக்டோரியா எங்கள் அணி வகுப்பில் மழை பெய்ய முடியாது. நாங்கள் தான் சாதனையாளர்கள் என அங்கு குவிந்து இருந்த ஆர்வலர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பினர்.

மனிதர்கள் ஒன்று கூடி கனடா தேசியக் கொடி உருவாக்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விக்டோரியாவில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேர் தேசியக் கொடியின் வண்ணம் கொண்ட சிவப்பு, வெள்ளை டிசர்ட்டுகளில் பங்கேற்றனர்.
இந்த கனடா நாள் கொண்டாட்டத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேத் மிடில்டன் தம்பதி பங்கேற்று சிறப்பித்தனர். நாடாளுமன்ற மலைப்பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு இங்கிலாந்து அரச தம்பதியை வரவேற்றனர்.

அரச தம்பதியினர் 9 நாள் பயணமாக கனடா வந்துள்ளனர். நேற்று கனடா நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியது. கனடாவின் 144வது பிறந்த நாளில் குவிந்து இருந்த மக்கள் கூட்டத்தில் இளவரசரும் இளவரசியும் உற்சாகம் பொங்க கையை அசைத்தனர்.

கனடா நாள் உரை நிகழ்த்திய இளவரசர் வில்லியம் இரண்டாம் உலகப்போரின் போது அல்பெர்டாவில் தனது தாத்தா விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றதை நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment