Monday, 12 September 2011

ஒரு அப்பாவியின் குரல்!


டெல்லி: கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.


எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது என் பெயரை கலங்கப்படுத்தவும், அரசியல் லாபதிற்கும் செய்யப்படுவதாக தன் வக்கீல் என்.டி.பஞ்சொளி மூலம் விடுத்துள்ள அறிக்கையில் அப்சல் கூறியுள்ளார். முன்னதாக, ஹுஜி அமைப்பின் பெயரில் வந்த இமெயிலில் அப்சலை விடுவிக்கும் முகமாக டெல்லி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை கைதியாக இருந்தாலும், அவர்களுடைய தரப்பு நியாயத்தையும், கருத்தையும், கேட்கவேண்டும்  என்பதுதான் உலக அளவில் நீதித்துறையின் நியதி.  அந்த நீதிகள் அப்சல் குரு என்ற மனிதனிடம் மட்டும் மீறப்படுவத்தின் மர்மம்தான் என்ன? அப்சல் குருவின் விசயத்தில் நீதிபதிகள் அவரது கருத்தை கேட்க்க கூட மறுப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் பாசிச சிந்தனை கொண்டதுமாகும். குற்றம் செய்த நபர் சொல்வதை நான் கேற்க முடியாது என்று நீதிபதிகள் சொன்னால்!!! கோர்ட் எதற்கு,  நீதிபதிகள்தான் எதற்க்கு, நாட்டை உளவு துறை என்னும்பொய்யர்களிடம் ஒப்படைத்து விட்டு போனால்! மக்களின் வரி பணமாவது மிச்சப்படும்.
இது தான் ........இந்திய ஜன .....நா  ஆஆஆ ............யகமா?


நன்றி : சிந்திக்கவும் வலைதளம் 

No comments:

Post a Comment