Monday 12 September 2011

டெல்லி குண்டுவெடிப்பு : காவி பயங்கரவாதத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

ஐதராபாத்: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்கான விசாரணையில் காவி பயங்கரவாதத்தையும் உட்படுத்த வேண்டும் என ஐதராபாத்தைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் 90ற்கும் மேற்பட்டோர்  படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சம்பவத்தை யார் நிகழ்த்தியிருப்பார்கள் என்ற உண்மை உறுதிசெய்யப்படாத நிலையில் இமெயில் மூலம் வரும் தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இல்லாத அமைப்புகளை காரணம் காட்டி வருவதை விட்டுவிட்டு உண்மை குற்றாவாளிகளை கண்டறிய முயற்சி செய்யவேண்டும். அதே போன்று இந்த விசாரணையில் காவி பயங்கரவாத அமைப்புகளையும் உட்படுத்த வேண்டும், காரணம் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இவர்களது பங்கு இருந்தது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது என அந்த மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. 

இனி வரும் காலங்களிலும் இத்தகைய காவி பயங்கரவாத அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அக்குழு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.


இக்குழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது கான் கூறும்போது, இதன் விசாரணை நேர்மையாகவும் அதே சமயம் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது மட்டும் சந்தேகம் கொண்டு பாரபட்சமாக விசாரிப்பதை விட்டுவிட்டு நேர்மையான சிந்தனையுடன் விசாரணை செய்ய வேண்டும். ஏனென்றால் சமீபகாலமாக நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டார்கள். ஆனால் தீவிர விசாரணைக்கு பின்பு இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்த தீவிரவாதிகள் தான் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிவந்திருக்கிறது என கூறினார்.

லத்தீஃப் முஹம்மது கான் மேலும் கூறுகையில், ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு நிகழும் போது விசாரணை அதிகாரிகளை குழுப்புவதற்காக அவர்கள் இமெயில் மூலம் தாங்கள் தான் இதை செய்தோம் என்று செய்தி வருகிறது. டெல்லி குண்டுவெடிப்பிற்கு பிறகும் கூட வங்காள தேசத்திலிருந்து செயல்படுவதாக கூறும் ஹூஜி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அரசாங்கத்திற்கு இமெயில் வந்துள்ளது. பின்னர் மீண்டும் நாங்கள் தான் இதை செய்தோம் என இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இமெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியது. காவல்துறையினரை குழுப்புவதற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடுவதற்காகவும் உண்மை குற்றவாளிகளே இத்தகைய இமெயில்களை அனுப்புகின்றனர் எனக்கூறினார்.


இந்தியாவில் எண்ணற்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ், சனாதன் சான்ஸ்தா, அபிநவ் பாரத், போன்ற தீவிரவாத இயக்கங்களின் தாக்குதல்கள் இன்று அம்பலமாகியுள்ளன. அத்தோடு மட்டுமல்லாமல் இன்னும் எண்ணற்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் குண்டுவைத்து பல அப்பாவி மக்களின் உயிரை பறித்துள்ளனர் எனக்கூறினார்.

அஃப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக அந்த இமெயில் தகவல் அறிவிக்கிறது. இந்த தாக்குதல் அஃப்சல் குருவை தூக்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக அல்ல மாறாக மத்திய அரசாங்கம் அவரை விரைவில் தூக்கில வேண்டும் என்பதற்காகத்தான் என்பது தெளிவாகிறது. இன்று அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளே மத்திய அரசை நிர்பந்தித்து வருகிறது.

எனவே நிச்சயமாக அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று மத்திய அரசை நிரப்ந்தித்து வரும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளே இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தி இருக்கவேண்டும் என அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். (அல்ஹம்துலில்லாஹ்! இதையே தான் நாமும் சில நாட்களுக்கு முன்னர் நமது வலைப்பூவில் பதிவுசெய்திருக்கிறோம்.

டெல்லி காவல்துறையினரும் இந்த விசாரணை மேற்கொள்வதற்காக எந்த ஆதாரமும் இன்றி திணறிவருகிறார்கள். தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும், நேர்மையான விசாரணையின் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என லத்தீஃப் முஹம்மது கான் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment