எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் தாக்கியுள்ளனர். எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரகம் அமைந்துள்ள
கட்டிடம் மக்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டுள்ளது முபாரக்கிற்கு
எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, இராணுவம் இடைகால நிர்வாகம் ஏற்பட்டதன்
பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து
வருகின்றனர்.
இதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் நடைபெற்ற வன்முறையை கண்டித்துள்ளது இதற்கு இடைகால அரசாங்கமும், இராணுவ நிர்வாகமும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளதுடன் வேகமாக மக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கான கால வரையறை மற்றும் இஸ்ரேல் எகிப்து மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிரான எகிப்து நிர்வாகத்தின் ஆமைவேக அணுகுமுறை போன்றவை மக்களை மீண்டும் வீதிக்கு இறக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது
கடந்த மாதம் எகிப்து மீது இஸ்ரேல்
தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகள
உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை
ஏற்படுத்தியிருந்தது . நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜும்மா முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில்
திரண்டு , வேகமான அரசியல் மாற்றம் கோரியும் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க
கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப்
பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர்
கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த
மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்தையும் தாக்கினர் இதை
தொடர்ந்து இஸ்ரேல் தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும்
மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இஸ்ரேலுக்கு
ஒடி தப்பியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம்
நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின்
துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் வபாத்தாகியுள்ளனர் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக்
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்றும் வரை கலவரம் தொடர்ந்து
நடைபெற்றுள்ளது.
கெய்ரோ நகரில் அவசரநிலை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் இராணுவத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். “இது மோசமான சம்பவம்” என்று
கூறியுள்ளார். இதற்கிடையில் “இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு
அளிக்க வேண்டும்” என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment