Friday, 24 June 2011

ஆப்கனில் இருந்து வீரர்களை திரும்ப அழைக்க பிரான்ஸ் முடிவு

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்கள‌ை வாபஸ் பெறப்போவதாக அந்நாட்டு அதிபர் நேற்று தெரிவித்தார்.


ஆப்கனில் நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் ‌என அதிபர் ஒபாமா அறிவித்தார்.

இவர்கள் வாபசுக்குப் பின் அந்நாட்டில் மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில் ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அமெரிக்காவைப் போலவே ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவர். இனி ஆப்கானிஸ்தானை அந்நாட்டு வீரர்களே பாதுகாப்பர்" என்றார்.

ஆப்கானில் காபூல், கபீஸா ஆகிய மாகாணத்தில் தான் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து மட்டும் 10 ஆயிரம் இங்கிலாந்து வீரர்கள் ஆப்கானில்தானில் 2015ம் ஆண்டு வரை இருப்பர் என தெரிவித்தது.

No comments:

Post a Comment