மணிலா- பிலிப்பின்ஸ் நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 50 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கேடன்டுவான்ஸ் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதையடுத்து, தலைநகர் மணிலா அருகே வசித்து வந்தவர்களில் 5000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வந்தவர்களில் மொத்தம் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, 10 மீனவர்கள் உட்பட பலரைக் காணவில்லை என்று கேடன்டுவான்ஸ் மாகாண போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அல்பே மாகாணமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வெகுவாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
No comments:
Post a Comment