Thursday, 2 June 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வாஜ்பாய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப முடிவு!


டெல்லி:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு தீவிரவிசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 1999-ம் ஆண்டு சிறிது காலம் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்தார்.

இதனால் அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக என்ன நடந்தது என்று முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. 

அதுபோல் 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி நடந்த போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிக்கையாளர் அருண்ஷோரி இருந்தார்.

இவர் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) உட்பட பல நிறுவனங்களுக்கு முறைகேடாக காற்றலை ஒதுக்கீடு செய்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வாஜ்பாய்க்கு எப்போது சம்மன் அனுப்புவது என்ற முடிவை வரும் 6-ந் தேதி சி.பி.ஐ எடுக்கப் போவதாக தெரிகிறது. இந்நிலையில் மிகவும் வயதாகி விட்ட வாஜ்பாய், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment