Monday 6 June 2011

ராம் தேவுக்கு காவியைவிட வெள்ளையே பெட்டர்: லாலு!


ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவுக்கு காவி உடையை விட வெள்ளை உடையே பொருத்தமானது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் குறித்து கருத்துக் கூறிய லாலு பிரசாத், ஒரு சாது எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு ராம்தேவ் பேசவில்லை என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய வேலைகளுக்காக பாபா ராம்தேவை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாபா ராம்தேவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதுமே, உண்ணாவிரத மேடைக்கு முதன் முதலில் வந்தவர் சாத்வி ரிதம்பராதான். பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளில் மிக முக்கியமானவர் இவர் என்றும் லாலு கூறினார்.

பாபா ராம்தேவ் அரசியலில் நுழைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ராம்தேவுக்கு காவி உடையை விட வெள்ளை உடைதான் (அரசியல்வாதிகளின் உடை) மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

No comments:

Post a Comment