Thursday, 4 July 2013

எகிப்த்: அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும்?- யூசுஃப் அல் கர்ளாவி!

ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான  ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.

மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936) 

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952) 

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970) 

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981) 

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)

என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்..! 

முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது. ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..! 

இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை அல்ல... அன்று இஸ்லாம் இஸ்லாமியர்களை மீண்டும் அரங்கிற்கு அழைத்து வரும்... அசத்தியம் அழிந்தே தீரும் ..! எகிப்திய மண்ணில் கொளுத்திவிடப் படும் சத்தியத் தீபம் எகிப்தின் மூளை முடுக்குகளில் மாத்திரமல்ல, உலகின் நாளா திசையிலும் கொழுந்து விட்டெரியும் .! அது மத்திய கிழக்கின் விடியலாக... வளைகுடாவின் வசந்தமாக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறித்துச் செல்லும்!

qaradawi

மேலும் இது சம்ந்தமாக கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி கூறுகையில் முர்ஸி பதவி விலகுவார் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நாட்டை ஆள்பவர் யார்? அல்லாஹ் மீதாணையாக! அதன் பிறகு,அவரைப் போன்றதொருவரை நாம் காணமுடியாது தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மிக மோசமானவர்கள் தான் வருவார்கள். அதன்பின்னரும் மிக மோசமானவர்கள் வருவர். இது வெறும் ஊகமல்ல. வரலாற்றில் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கிறது. ஏனைய நாடுகளிலும் நிலமை இவ்வாறுதான் உள்ளது.எனவே, முபாரக்கின் 30 வருட ஆட்சியிலும், அதற்கு முன்னர் 30 வருடங்களும் பொறுமையாயிருந்த நாம்,ஏன் முர்ஸியின் ஆட்சியில் ஒருவருடம் பொறுக்கக் கூடாது! அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் முர்சிக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது சட்ட ரதியாகத் தேர்வு செய்யப்பட்ட எகிப்து ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதரவாக மத்ரூஹ் பிரதேசத்தில் தரித்து நின்ற ஆயிரக் கணக்கானோர் மீது இராணுவமும் பொலிஸாரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் முர்ஸிக்கு ஆதரவான 7 பேர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.இங்கு கூடியிருந்த முர்ஸியின் ஆதரவாளர்கள், இராணுவ ஆட்சி விழட்டும் என்று கோஷமிட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர், காயப்பட்ட எவருக்கும் முதலுதவி மேற்கொள்ள மறுத்துள்ளதோடு, அம்புலன்ஸ் வண்டிகள் அவர்களைச் சென்றடைவதையும் தடுத்துள்ளனர்.ப்ரானி பிரதேசத்திலும் முர்ஸியின் ஆதரவாளர்கள் 3 பேர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.

எகிப்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5-வது ஜனாதிபதி முர்ஸிதற்போது எங்கே உள்ளார் என்பதை ராணுவம் அறிவிக்கவில்லை. ஆனால், அவர் ராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் முர்சியின் உரை அடங்கிய டேப், அல்-ஜசீரா டி.வி. சேனலை சென்றடைய, அவர்கள் அதை ஒளிபரப்பினார்கள்.அந்த ஒளிபரப்பு நடந்துகொண்டிருந்த போது, அல்-ஜசீராவின் காய்ரோ அலுவலகத்தை முற்றுகையிட்ட ராணுவம், அதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் இருவரை கைது செய்தது.தனது அத்துமீறலை தொடர்ந்தது.மேலும் இதற்கு பின் புலமாக அமெரிக்க மற்றும் சில அரபு நாடுகளின் சதி இருப்பாதாக கருதபடுகிறது .மீண்டும் முர்சி வர வேண்டும் என அனைவாரலும் எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment