கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.
தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயாளர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (NCHRO) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பவானி.பா.மோகன்,பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஷா நவாஸ் நன்றியுரையாற்றியார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன், மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம், எஸ்டிபிஜ மாநில செயலாளர் அபுதாஹிர், மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். கோவை சிறைவாசி குடும்பங்களின் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்பட 2000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா உசேன்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயாளர் ஏ.காலித் முஹம்மது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில்
எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி
NCHROவின் தமிழ் மாநில தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பவானி.பா.மோகன்
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன்
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டம்
No comments:
Post a Comment