Monday 27 June 2011

அமைச்சரவை மாற்றதிற்கு முன் ஆளுநர்கள் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மும்பை : மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

வரும் ஜூலை மாதம் 2-ம் தேதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு முன் தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக சிந்தித்து வருகிறது.

தமிழக முதல்வருடன் நட்பு பாராட்டும் உத்தரகண்ட் ஆளுநர் மார்கரெட் ஆல்வா தமிழக ஆளூநராக நியமிக்கக்கூடும் என்றும், கர்நாடகத்தில் சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கும் பரத்வாஜிற்கு பதிலாக முன்னாள் ஆந்திர முதலவர் ரோசய்யாவை நியமிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது பஞ்சாப் ஆளுநராக இருக்கும் சீவராஜ் பாட்டீல் மீண்டும் மத்திய அமைச்சர் ஆவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை 22-ம் தேதி மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் போட்டியிட்டு அவர் மத்திய அமைச்சராக முயற்சிப்பதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment