Monday 27 June 2011

காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்

பாரிஸ்:காஸ்ஸாவுக்கு நிவாரணப்பொருட்களுடன் புறப்படவிருக்கும் குழுவில் பிரான்சு நாட்டு கப்பலும் இணைகிறது.ஆறுபேரைக்கொண்ட சிறிய கப்பல் காஸ்ஸா உதவுக்குழுவுடன் இணைவதற்காக கோர்ஸிகா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.


பிரான்சு கொடியை ஏந்தியுள்ள கப்பல் க்ரீஸ் கடல் எல்லையில் வைத்து இதர கப்பல்களுடன் இணையும்.பல்வேறு துறைமுகங்களிலிருந்து அடுத்தவாரம் கப்பல்கள் காஸ்ஸாவுக்கு செல்ல உள்ளதாக பிரான்சு ஒருங்கிணைப்பாளர் ஃபுலின் எ.எஃப்.பிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.அடுத்த வாரம் இறுதியில் மருந்துகள் அடங்கிய கப்பல்கள் காஸ்ஸா துறைமுகத்தை அடையும்.30 நாடுகளை சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் அடுத்தமாதம் காஸ்ஸாவுக்கு புறப்படப்போவதாக அறிவித்துள்ளனர்.காஸ்ஸாவிற்கு உதவி கப்பல்களை அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேலின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் இக்கப்பல் குழு செல்கிறது.இரண்டாவது உதவி கப்பல் கோபத்தை தூண்டக்கூடிய, தேவையற்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.கப்பல் உதவிக்குழுக்களால் காஸ்ஸா மக்களுக்கு உதவமுடியாது என ஹிலாரி கூறுகிறார்.

கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஒன்பது தன்னார்வ தொண்டர்கள் பலியாகினர்.

No comments:

Post a Comment