Monday 27 June 2011

பிரிட்டன் - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இரு நாட்டு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

சீனா மற்றும் பிரிட்டன் இடையே 100 கோடி வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படுகிறது.

பிரிட்டனுக்கு வருகை தந்த சீன பிரதமர் வென்ஜியா பவ் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இடையே திங்கட்கிழமை சந்திப்பின் போது இந்த வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் தயாரிப்பு பொருட்களுக்கு சீன சந்தை திறந்து விடப்படும் என வென்ஜியா பவ் உறுதி அளித்துள்ளார். பிரிட்டிஷ் தலைவருடன் லண்டனில் சீனப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அவர் 3 நாள் பயணமாக பிரிட்டன் வந்துள்ளார். அவர் 2வது நாள் பயணத்தின் போது பிரிட்டன் பொருட்களுக்கு சீன சந்தை திறந்து விடப்படும் என உறுதி அளித்தார். ஐரோப்பாவின் 3 நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தில் முதல்கட்டமாக ஹங்கேரி வந்த சீனப்பிரதமர் ஐரோப்பிய பொருளாதார மீட்சிக்கு சீனா பெருமளவு உதவும் என உறுதி அளித்தார்.

எந்த நேரத்திலும் ஹங்கேரிக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். சீனா-பிரிட்டிஷ் உறவின் முக்கியத்துவம் அதிகரித்து உள்ளது என பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தெரிவித்தார்.

ஆசிய தேசமான சீனா முக்கிய பொருளாதார சக்தியாக திகழ்கிறது. அதே போன்று பிரிட்டனில் அது பெருமளவு முதலீடு செய்யும் நாடாகவும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெறும் சந்திப்பின் போது சீனாவில் பிரிட்டன் நிறுவனங்கள் வணிகம் செய்ய விருப்பம் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment