Monday, 27 June 2011

சிரியாவில் கடும் போராட்டம்: லெபனானுக்கு ஓடும் மக்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசு படைகள் நடத்தும் அதிரடி தாக்குதலில் இதுவரை 1,300 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியா எல்லை பகுதியில் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த இரண்டு நாட்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களை வீடு வீடாக தேடும் பணியில் அரசு படையினர் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானவர்கள் லெபனான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment