SDPI-ன் மாநிலத்தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மத்திய அரசு சமையல் எரிவாயு, டீசல், மண்ணென்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அத்தியாவசிய பொருள்களின்விலையை பன்மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும்.
மத்திய அரசு நேற்று முன்தினம் மண்ணென்ணெய், டீசல் ஆகியவற்றின் விலையை இரண்டு ரூபாய், சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் உயர்த்தியிருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினுடைய விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த விலை உயர்வு என்று காரணம் சொல்லப்படுகிறது.
அதே சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினுடைய விலை குறையும் போது பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை வேறு வழிகளில் அதை சரி செய்ய வேண்டுமே தவிர பொதுமக்களின் தலையில் சுமத்துவது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு இழைக்கும் அநீதியாகும்.
மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருள்களின் விலையை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் பெட்ரோலிய பொருள்களின் மீதான வரியை வாபஸ் பெறவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
KKSM தெஹ்லான் பாகவி
மாநிலத் தலைவர்

No comments:
Post a Comment