Friday 12 July 2013

முத்துப்பேட்டை: மக்களுக்கு பயனில்லாத பேரூராட்சியின் திட்டம்! தடுத்து நிறுத்திய எஸ்.டி.பி.ஐ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள பட்டறை குளம் நீண்ட நாட்களாக அசுத்தமான நிலையில் இருந்துவருகிறது. குளத்தை சுத்தம் செய்து தூறுவாரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இக்கோரிக்கையை ஏற்று இரண்டு வருடங்களுக்கு முன்பு  குளத்தை சுத்தம் செய்து தூறுவாரும் பணிக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு சிலநாள் பணி நடைபெற்று அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று மக்களுக்கு எந்த பயனும் அளிக்காமல் கழிவுநீர் தொட்டியாக காட்சி அளிக்கிறது.

நிலைமை இப்படி இருக்க, தொடங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, புதிதாக ரூ.27 லட்சம் ஒதுக்கப்பட்டு அசுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பாதை அமைக்கும் பணியை இன்று பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. பன்றிகளின் கூடாரங்களுக்கு மத்தியில் நடைபயிற்சி செய்தால் மக்களுக்கு தீங்கு ஏற்படுமே தவிர எந்த பயனும் இல்லை என்ற மக்களுக்கு எந்த பயனும் அளிக்காத இந்த திட்டத்தை உடனே நிறுத்துவதற்காக SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது, நகர பொருப்புதாரிகள் சேக் மைதீன், முகம்மது மைதீன், நிஷார், ஹபிப் கான் மற்றும் கட்சியன் உறுப்பினர்கள் பலர் களத்தில் இறங்கி பேரூராட்சி அதிகாரிகளிடம் பேச்சிவார்த்தை நடத்தினர்.

பலமணி நேரம் பேச்சிவார்த்தைக்கு பின் பணியை தற்காலிகமாக நிறுத்த ஒத்துகொண்டனர். முறைப்படி பேரூராட்சிக்கு மனு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் SDPI கட்சியின் சார்பாக பேரூராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.






No comments:

Post a Comment