புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
தாங்கள் செய்தி வெளியிட்டது ஐ.பி அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் என்று சண்டே கார்டியன், டெக்கான் க்ரோனிக்கிள் ஆகிய பத்திரிகைகளும், என்.ஐ.ஏவிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக பயனீர் பத்திரிகையும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.
ஐந்து பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவான தீர்மானத்தை ப்ரஸ் கவுன்சில் எடுத்தது.எதிர்காலத்தில் இத்தகைய செய்திகளை வெளியிடக்கூடாது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்குலாப் (உருது), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நவபாரத் டைம்ஸ்(ஹிந்தி), ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் தீர்ப்பளித்து ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.
அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக செய்தியை வெளியிடும்போது மிகவும் கவனம் தேவை என்று கவுன்சில் அறிவுறுத்தியது. தைனிக் ஜாக்ரன் மீரட், தைனிக் ஜாக்ரன் டெல்லி ஆகிய பத்திரிகைகள் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் கோரின. நான்கு வாரங்களுக்கு பிறகு கவுன்சில் மீண்டும் விசாரணை நடத்தும்.
செய்தி:தேஜஸ்
No comments:
Post a Comment