Friday, 19 July 2013

எஸ்.டி.பி.ஐ கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பாஜக!


சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக்கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப்பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர்கதையாகி போனது. இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோடி வேண்டுமானால் பாஜக வுக்கு தலைவராக இருக்கலாம்.இந்தியாவுக்கு அவர் தலைவரில்லை.அவரை விட சிறப்பான ஏன் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் நமது தமிழகத்தில் உண்டு.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பதில் சொல்ல பலமுறை தயங்கும் மோடியை,முன்னுக்கு பின் முரணாக பேட்டி கொடுக்கும் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது என்ற செய்தி இந்துத்வாவாதிகள் மூலம் கசிவதை பார்த்தால் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு வேறு ஆள் இல்லாதாதால் மோடியை வேறு வழியின்றி தேர்ந்தெடுத்திருப்பார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த வேளையில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மதச்சார்பற்ற இந்திய தேசத்தை மதவெறி கொண்டு பிளப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே இந்துமகாசபையும்,முஸ்லீம் லீக்கும் செய்த தவறை இனி இந்த தேசத்தில் அனுமதிக்க முடியாது.

ஆனால் பாஜக வின் செயல்பாடுகள் பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது.

வேறு எந்த கட்சிகளும் செய்யத்துணியாத காரியத்தை பாஜக செய்ய துணிகிறது.ஆகவே எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியாமுழுவதும் பாஜகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதனை பொறுக்க முடியாமல் பாஜக மறைமுகமாக இந்து முண்ணனியினரை தூண்டி விட்டு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எதிராக நெல்லையில் புகார் செய்துள்ளது. அந்த புகார் என்னவெனில் வருங்கால பிரதமர் மோடியினை எஸ்.டி.பி.ஐ கட்சி அவதூராக பிரச்சாரம் செய்வதாக புகார்.

இந்த கேடு கெட்ட புகாரையும் வாங்கி கொண்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜகவின் மோடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விமர்சித்தார்கள் என்று பாஜக காரன் புகார் கொடுத்தால் கூட ஒரு வழியில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இந்து முண்ணனி மூலம் புகார் கொடுத்து,அதன் மூலம் மோடிக்கு அனுதாபத்தை பெற்றுக்கொள்ள பாஜக முயல்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் காட்டுகிரது என்றே கருதுகிறேன்.

எது எப்படியோ காங்கிரஸ் கட்சி பாஜக வை கண்டு பயப்படுவதை போல், பாஜக எஸ்.டி.பி.ஐ கட்சியினை கண்டு பயப்படுகிறது என்பதே உண்மை, மடியினில் கணம் இல்லையெனில் அரசியல் வழியில் பாஜகவுக்கு பயம் எதுக்கு.

Thanks : BSI.Gani

No comments:

Post a Comment