எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் மேற்கத்திய நாடுகளையும் , ஜப்பான், சீனாவையும் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.
இவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
இவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி, இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம், ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார்.
துபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment