Friday 31 May 2013

“UAPA- கருப்புச்சட்டத்தை திரும்ப பெறு” பிரச்சார இயக்கம்! - எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு!


யுஏபிஏ(UAPA)என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலபொதுச்செயலாளரும், பிரச்சார இயக்க ஒருங்கிணைப்பாளருமான நிஜாம் முகைதீன் கூறுகையில்,

வருகின்ற ஜூன் 9 முதல் ஜூன் 18 வரை”UAPA-கருப்புச்சட்டத்தை திரும்ப பெறு“என்ற பிரச்சார இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்தவும், தமிழக மக்களிடையே இக்கொடிய சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில செயலக குழு முடிவு செய்துள்ளது.

இதன்படி தெருமுனை கூட்டங்கள்,போஸ்டர் பிரச்சாரம்,துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம், குடியரசுத்தலைவருக்ககு தந்தி அனுப்பும் போராட்டம், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றின் மூலம் இக்கொடிய சட்டத்தினை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இச்சட்டத்தினை திரும்ப பெற மத்திய அரசினை வலியுறுத்தும் வகையிலும் இத்தகைய அறப்போராட்டங்கள் நடைபெறும்.

ஆகவே இக்கொடிய சட்டத்திற்கு எதிராக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை தளங்களில் இயங்கும் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் இப்பிரச்சார இயக்கத்துக்கு ஆதரவு தருமாறும்,மனித உரிமைக்கான இப்போராட்டத்தில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு,

B.S.I.கனி,
மாநில பொறுப்பாளர்
செய்தி ஊடகத்துறை
எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு

No comments:

Post a Comment