Tuesday 21 June 2011

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி

வடமேற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.



9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த டியூப்லெவ்-134 விமானம் பெட்ரோஜவாத்ஸ்க் நகருக்கு வெளியே பெஸோவெட்ஸ் விமானநிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.


பனிமூட்டத்தினிடையே தரை இறங்க முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் 7 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment